#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
பிரபல நடிகையாக இருந்து வரும் குஷ்பூ தன்னை ஆபாசமாக உறவுக்கு அழைத்ததாக ஒரு ஹீரோ மீது குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கொடிகட்டி பறந்த நடிகை :
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்திலிருந்து இன்று வரை மிகப்பெரிய நடிகையாக இருந்து வருபவர் குஷ்பூ. இவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு வேறு எந்த நடிகைக்குமே கிடைக்கவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு அறிமுகமான புதிதிலேயே இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாமல் இவரது திரைப்படங்களும் நல்ல வெற்றியை கொடுத்தது.
இதையும் படிங்க: "அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கோவில் கட்டிய ரசிகர்கள் :
ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஆரம்ப காலத்திலேயே நடித்தவர் குஷ்பூ. பல ஹீரோக்களும் குஷ்புவை தனது படத்தில் சேர்க்குமாறு ரெகமெண்ட் செய்யும் அளவிற்கு அவருக்கு ஆதரவு இருந்தது. அப்படிப்பட்ட குஷ்பூவுக்கு தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்து வருகின்றார்.
படுக்கைக்கு வாய்ப்பு கேட்ட பிரபல ஹீரோ :
இந்த நிலையில் ஒரு பிரபல ஹீரோ தான் ஹீரோயின் ஆக நடித்த காலகட்டத்தில் தன்னை படுகைக்கு அழைத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனியாக இருந்தபோது அவரிடம் நெருங்கி வந்து, "ஒரு முறை எனக்கு சான்ஸ் கொடுப்பீர்களா?" என்று ஆபாசமாக பேசியதாகவும், அதற்கு அவர், "நான் உங்களை செருப்பால் அடித்துக் கொள்ளவா?" என்று பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது சினிமா துறையில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!