மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விருது விழாவில் தன் மனைவிக்கு ஏ. ஆர் ரகுமான் போட்ட அன்பு கட்டளை.! கரகோஷத்தால் அரங்கை அதிரவைத்த ரசிகர்கள்! வைரல் வீடியோ!!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர் ரகுமான். அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். மேலும் அதற்காக அவர் ஏராளமான தேசிய விருதுகளையும், ஆஸ்கர் விருதினையும் பெற்றுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஏ.ஆர் ரகுமான் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். மேலும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தவர். ஏ.ஆர் ரகுமான் அவர்கள் அண்மையில் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.
அப்பொழுது தொகுப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானின் மனைவியை மேடைக்கு அழைத்து, சில வார்த்தைகள் பேசுமாறு கூறியுள்ளனர். சாயிரா பேச துவங்கிய போது, இந்தில பேசாதீங்க; தயவுசெஞ்சு தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் என ஏ.ஆர் ரகுமான் தனது மனைவிக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார். அதனை கேட்டு இயக்குனர் மணிரத்னம், நடிகை சாய் பல்லவி உள்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சிரித்து கரகோஷம் அளித்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கேப்புல பெர்பாமென்ஸ் பண்ணிடாப்ள பெரிய பாய்
— black cat (@Cat__offi) April 25, 2023
ஹிந்தில பேசாதீங்க தமிழ்ல பேசுங்க ப்ளீஸ் 😁 pic.twitter.com/Mji93XjjID