மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல், சூர்யா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அர்ஜுன் தாஸ்! ஏன்? உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு!!
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தற்போது கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உருவான இப்படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளனர்.
மேலும் கைதி படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், லோகேஷ் கனகராஜ் மச்சி ஒரு சீன் என்று அழைத்த போது எந்தக் கேள்வியும் கேட்காமல் சென்றுவிட்டேன். ஆனால், அந்த காட்சியில் ஒரு பக்கம் கமல் சார், மறுபக்கம் சூர்யா சார். என்ன செய்ய முடியும்? நாம் கொண்டாடும் இரு நடிகர்கள் கண்முன்னே நிற்கும் போது அவர்களை பார்க்கதான் தோணும்.
மானிட்டரில் அவர்களை மீண்டும் மீண்டும் பார்த்தது என் வாழ்வின் சிறந்த அனுபவம்.,எனக்கு பிடித்த கமல் சார், சூர்யா சார் மற்றும் லோகேஷுடன் வேலை செய்துவிட்டேன். கமல் சாரை பார்க்க சாம்கோவுக்கு வெளியே காத்திருந்தது போய் இன்று அவரது படத்தில் நடித்தவிட்டேன்.என் கனவு நனவாகிவிட்டது. அந்த வாய்ப்புக்கு நன்றி. சூர்யா சாருடன் சேர்ந்து நடித்தது எனக்கு கிடைத்த கௌரவம் என பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் அர்ஜுன் தாஸ் நான் கமல் சார் மற்றும் சூர்யா சார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நான் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறேன் என்ற தகவல் வெளியானதும் கமல் சார் மற்றும் சூர்யா சாருடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து நீங்கள் கேட்டீர்கள். ஆனால், அப்பொழுது என்னால் சொல்ல முடியவில்லை. அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்போது கேட்டால் அது லைஃப்டைம் செட்டில்மென்ட் என்று கூறுவேன் எனக் கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது