Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
அர்ஜுனின் மூத்த மகள் காதலித்து வரும் பிரபலம் யார் தெரியுமா.? விரைவில் திருமணம்.!
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து அறியப்படும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனனின் மூத்த மகளாவார். ஐஸ்வர்யா அர்ஜூன் முதன் முதலில் விஷால் நடிப்பில் வெளியான 'பட்டத்து யானை' திரைப்படத்தில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
இப்படம் மிகப்பெரும் தோல்வியை அடைந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. இதன் பின்பும் 2018 ஆம் ஆண்டு 'சொல்லி விடவா' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதால் தமிழ் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்நிலையில் தற்போது அர்ஜுனின் மகள், காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இது ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தரப்பில் எந்த விளக்கமும் வெளியாகவில்லை. மேலும் இதற்கு முன்பாக உமாபதி ராமையா, நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.