மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அசினுக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா!?" வெளியான புகைப்படம்!
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அசின். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார். 2001ம் ஆண்டு மலையாளத்தில் தான் இவர் முதலில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் "அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி" என்ற படத்தில் அறிமுகமானார்.
தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக "எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி" படத்தில் அறிமுகமான அசின், தொடர்ந்து கஜினி, வரலாறு, போக்கிரி, வேல், தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
கடைசியாக அசின் ஹிந்தியில் "ஆல் இஸ் வெல்" என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் பிஸியான நடிகையாக இருந்தபோதே, 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையடுத்து சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்ட அசினுக்கு 2017ம் ஆண்டு ஆரி என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவரது மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் "இவருக்கு இவ்ளோ பெரிய மகளா?" என்று கேட்டு வருகின்றனர்.