மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம். குமரன் சன் ஆப் மகாலஷ்மி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அசின் அதன்பின்னர் கஜினி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
கஜினி படத்தை அடுத்து அஜித், விஜய், விக்ரம் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த இவர் சில படங்களுக்கு அடுத்து பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.
இந்நிலையில் மைக்ரோ மேக்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை அசின். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பல்வேறு தொழில்களில் சிறந்துவிளங்கும் நடிகை அசினின் கணவரது சொத்து மதிப்பு சுமார் 668 கோடியில் இருந்து 1400 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.