மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை அசினின் கணவர் தொடங்கிய புதிய தொழில்! அவரோட சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? தலைசுற்றிப்போன ரசிகர்கள்!
தமிழில் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். அவர் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் உள்ளம் கேட்குமே, சிவகாசி, கஜினி,வேல் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.பின்னர் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகியது.
பின்னர் அவர் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அங்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பின்னர் நாளடைவில் அவருக்கு படவாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையால் அவர் 2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் நிறுவனரான ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார். இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் நிறுவனர்களுள் ஒருவரான ராகுல் ஷர்மா, மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் பல இழப்புகளை சந்தித்து மதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக் விற்பனையில் களமிறங்கியுள்ளார். இவ்வாறு பல்வேறு தொழில்களில் சிறந்துவிளங்கும் நடிகை அசினின் கணவரது சொத்து மதிப்பு சுமார் 1400 கோடி வரை இருக்கும் ஏன் கூறப்படுகிறது.