மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் என் நேரம்.. நான் அப்படியெல்லாம் கிடையாது நம்புங்க! கலங்கிய அஸ்வின்! ஏன்னு பார்த்தீங்களா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து அவர் பல ஆல்பம் பாடல்களில் நடித்தார். அனைத்துமே செம ஹிட்டானது.
இந்த நிலையில் அஸ்வின் தற்போது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அப்பொழுது பேசிய அஸ்வின், ரசிகர்களின் அன்பால்தான் நான் இவ்வளவு வளர்ந்திருக்கிறேன். விஜய் தொலைக்காட்சி எனக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நான், இதுவரை 40 கதைகளைக் கேட்டு தூங்கி இருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் மட்டுமே. இப்படத்தின் இயக்குனர் ஹரிஹரன் மிகவும் சிறப்பாக இந்த கதையை கொண்டு செல்கிறார் என பலவற்றை கூறியுள்ளார்.
அவரது பேச்சு திமிராக இருப்பதாக ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். மேலும் ஒரு படம் கூட வெளிவரவில்லை அதற்குள் இப்படியா? எனவும் திட்டித் தீர்த்தனர். மீம்ஸ்களும் வைரலானது. இதனால் மனமுடைந்த அஸ்வின் தான் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் மேடையில் பேசியது இதுதான் முதல் முறை. அதனால் மிகவும் பதட்டத்துடன் இருந்தேன்.
எனக்கு கதை சொன்ன எந்த இயக்குனர்களையும் நான் அவமதிக்கவில்லை. எனது பேச்சு இந்த அளவிற்கு விமர்சனத்திற்கு உள்ளாகும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதுவரை 40 கதைகள் எல்லாம் கேட்கவில்லை. நண்பர்களிடம் பேசுவது போன்று ஏதோ குத்துமதிப்பாக பேசிவிட்டேன். எனக்கு திமிர் எல்லாம் கிடையாது. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எல்லாம் என் கெட்ட நேரம். நான் சாதித்த பிறகு கூட இந்த ஆணவமெல்லாம் எனக்கு வராது என மனம் வருந்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.