மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட மரண மாஸ்ல.. சாம்பல் நிற வேட்டி சட்டையில் செம மஜாவாக, சும்மா வேற லுக்கில் மாறிய குக் வித் கோமாளி அஸ்வின்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இளம்பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் அஸ்வின். போட்டியாளராக கலந்து கொண்டு, அசத்தலாக சமைத்து நிகழ்ச்சியின் இறுதிவரை சென்ற இவர் போட்டியாளர்களுடன், கோமாளிகளுடன் செய்த ரகளைகள் அனைவரையும் கவர்ந்தது.
இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் முக்கிய சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அஸ்வின் பல குறும்படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் எப்பொழுதும் கோட் சூட் என மாடர்ன் உடையில் இருக்கும் அவர் தற்போது சாம்பல் நிற வேட்டி மற்றும் சட்டையில், புது லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.