மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த உண்மையை அட்லீ என்னிடம் கூறாமல் ஏமாற்றி விட்டார்".. ஜவான் பட நடிகை பிரியாமணி பரபரப்பு பேட்டி.?
2008ல் வெளிவந்த 'பருத்திவீரன்' படம் மூலம் தன் நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டவர் பிரியாமணி. அந்த படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கியுள்ளார். 2017ஆம் வருடம் பிரியாமணி முஸ்தபா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்பும் தற்போது வரை தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதில் பிரியாமணி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுகின்றார் என்று ரசிகர்கள் கருதினர். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பேட்டியில் படத்தைப் பற்றி பிரியாமணி மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்தபேட்டியில் பிரியாமணி கூறியதாவது, "ஷாருக்கானுடன் நடிக்க என்னை அழைத்தபோது நானும் ஒரு பாடல் என்றே நினைத்தேன். ஒரு சிலர் நான் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை வைத்து ட்ரோல் செய்ய தொடங்கி விட்டார்கள். ஆனால் அட்லீ என்னிடம் கதை கூறியபோது நடிகர் ஆர்யாவும் அவருடன் இருந்தார். மேலும் அட்லீ என்னுடைய நண்பர் தான் என அறிமுகப்படுத்தி விட்டு ஆர்யா சென்று விட்டார். மேலும் அட்லீ ஷாருக்கானுடன் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரம் என்று கூறினார். மறுக்காமல் உடனே சம்மதித்து விட்டேன்.
அதுமட்டுமல்லாமல் ஜவான் திரைப்படத்தில் தமிழில் நடிகர் விஜய் மற்றும் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கப் போவதாக வதந்தி பரவியது. இதைப் பற்றி அட்லீியிடம் கேட்ட பொழுது அவர்களையும் நடிக்க வைக்கலாமே என்று கூறினார். நானும் அவ்வாறு அவர்கள் நடித்தால் அவர்களுடன் ஒரு காட்சியிலாவது என்னை நடிக்க வைத்து விடுங்கள் என்று அட்லீியிடம் கூறினேன்.அவரும் மறுக்காமல் தலையாட்டி விட்டு சென்றார். ஆனால் கடைசிவரை அவர்கள் இருவரும் ஜவான் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பதை அட்லீ என்னிடம் கூறாமல் ஏமாற்றிவிட்டார்.