மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவர்கள் என்ன கற்புக்கரசியா.? மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக களம் இறங்கிய பிரபல நடிகர்.!
நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவை பற்றி பேசிய சில விரும்பத் தகாத கருத்துகளுக்கு நடிகை திரிஷா முதல் இயக்குனர்கள் வரையில், பல்வேறு நடிகர்கள் வரையில் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைதளங்களிலும் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை சார்பாக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்படுள்ளது. இந்த நிலையில் தான் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மன்சூர் அலிகானுக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார்.
லியோ திரைப்பட வெற்றி விழாவில் எனக்கு ரேப் சீன் கிடைக்கும் என நினைத்தேன் இல்லாமல் போய்விட்டது என மன்சூர் அலிகான் பேசினார். திரிஷாவும், விஜயும் கூட அதைக் கேட்டு சிரித்தனர். அப்போது அவர் பேசியது தவறு என தெரியவில்லையா?
இவர்களெல்லாம் கற்புக்கரசி, கண்ணகியா? சினிமாவில் அவுத்து போட்டு நடனம் ஆடுவதில்லையா ? மதுபோதையில் நடு ரோட்டில் அலப்பறை செய்த நடிகையை வீட்டிற்கு கொண்டு போய் விட்டவர் மன்சூர் அலிகான். அதையெல்லாம் மறந்து விட்டார்களா? ஜெய்லர் பட விழாவில் தமன்னாவுடன் எனக்கு ஒரு காட்சி கூட இல்லை என வருத்தப்பட்டு ரஜினிகாந்த் பேசினார் அது மட்டும் உங்களுக்கு சரியா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மன்சூர் அலிகான் எப்போதும் விளையாட்டுத்தனமாக பேசுபவர் அப்படியே அவர் பேசியது மனதை புண்படுத்தியிருந்தால், அவர் வருத்தமும் தெரிவிக்கலாம். அவரிடம் விளக்கம் கேட்காமலேயே அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சொன்னது பெரிய தவறு
.
நடிகர் அஜித், நயன்தாரா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷனுக்கே வருவதில்லை. நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று மன்சூர் அலிகான் சொல்கிறார். இதில் என்னைப் பற்றியும் சில பத்திரிகையாளர்கள் மன்சூர் அலிகானிடம் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.
நான் இதுவரையில் எந்த நடிகை பற்றியும் ஆதாரமில்லாமல் பேசியதில்லை. எனவே இனிமேல் என்னை பற்றி நடிகை பற்றி பேசுகிறார் என்று சொன்னால், கிழித்து விடுவேன் என்று கோபமாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.