மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்போ பாக்யா வீட்டை விட்டு போகலையா?.. கோபியும், பாக்யாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரல்..! குழப்பத்தில் ரசிகர்கள்..!!
தமிழில் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சி விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் பல நெடுந்தொடர்களும் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
தற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக பாக்கியலட்சுமி நெடுத்தொடர் சென்று கொண்டிருக்கும் நிலையில், பாக்யா மற்றும் கோபி இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாக்யா தனது வீட்டிற்கு பொருட்களை எடுத்து செல்ல வருகிறார். அப்போது கோபி அவரை தடுத்து நிறுத்த பிரச்சனையாகியதால், பாக்யா வீட்டை விட்டு செல்வாரா?அல்லது அங்கேயே இருப்பாரா? என்பதுடன் முடிவடைகிறது.
இதற்குப் பின் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் பாக்யா மற்றும் கோபி இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆனால் இது சீரியலுக்காக இல்லை. ஒரு விளம்பரத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இருப்பினும் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அப்போ பாக்கியா வீட்டை விட்டு போகலையா? என்று குழம்பியுள்ளனர்.