Baakiyalakshmi: "நான் கல்யாணமே பண்ணிருக்ககூடாது" - கலங்கிபோன ராதிகாவுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா.!



Baakiyalakshmi Promo Today 1 Dec 2024 

மனமுடைந்து நொறுங்கிப்போன ராதிகாவுக்கு பாக்கியலட்சுமி ஆறுதல் கூறுகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி, கே.எஸ் சுசித்ரா, நேஹா மேனன், திவ்யா கணேஷ், சதிஷ் குமார், நந்திதா ஜெனிபர் உட்பட பலர் நடிக்க, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. கடந்த 2020 முதல் தற்போது வரை 3 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

கடந்த வாரம் வரையில் பாக்கியாவை தொழில் ரீதியாக வீழ்த்த கோபி பல சித்து வேலைகளை செய்ய, அதில் இருந்து பாக்கியா மீண்டு வருகிறார். இறுதியில், கோபிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு, அவர் உதவிக்காக பாக்கியவிடம் தொடர்புகொண்டார். பாக்கியாவும் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்கிறார். இதனால் ராதிகா நெகிழ்ந்தாலும், அவரின் மனம் ரணமாகிறது.

இதையும் படிங்க: Siragadikka Aasai: "உண்மைய சொல்லிடுவேன்" - ஷாக் கொடுத்த சிங்கப்பூர் மாமா.. அதிர்ச்சியில் ரோகினி.!

Baakiyalakshmi Promo

இந்நிலையில், ராதிகா தான் திருமணமே செய்திருக்கக்கூடாது. கோபி உங்களின் வீட்டில் இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்ததாக இன்று வரை கூறுகிறார்கள். நான் திருமணமே செய்திருக்கக்கூடாது என கலங்குகிறார். அவருக்கு பாக்கியலட்சுமி ஆறுதல் தெரிவிக்கிறார். இந்த ப்ரோமோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: "உன்னைத்தாண்டித்தான் எனக்கு எதுவுமே" - காவேரிக்கு பச்சைக்கொடி காட்டிய மகாநதி விஜய்.!