மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடஅட.. என்னா பாசம்! கண்ணை மூடச் சொல்லி பாலா செய்த காரியம்! கண்கலங்கிய தாமரை! வைரலாகும் வீடியோ!!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் நடிகர் கமல் தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறவே தற்போது சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் தீனா மற்றும் சாண்டி ஆகியோர் விருந்தினராக வருகை தந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலா மற்றும் தாமரை இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை கொட்டி, மிகுந்த பாசமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிம்பு கூட தாமரையிடம் பாலாவிற்காக விளையாடாமல் வெளியே உங்களுக்காக வாக்களிக்கும் தம்பிகளுக்காகவும் விளையாடுங்கள் என கூறினார்.
இந்த நிலையில் தற்போது பாலா மற்றும் தாமரையின் மற்றொரு பாச காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பாலா தாமரையின் கண்ணை மூடக்கூறி, அவருக்கு தான் முதன்முதலாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய செயினை கழுத்தில் போட்டு விட்டுள்ளார். பாலா சர்ப்ரைஸாக அளித்த பரிசினை கண்டு தாமரை கண்கலங்க மிகவும் வருந்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.