ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இரண்டாவது திருமணம் குறித்து பாவனி போட்டுடைத்த உண்மை! ஷாக்கான ரசிகர்கள்! என்ன தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இதில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டு அசத்தலாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றவர் பாவனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும் அதற்கு முன்பு அவர் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, ராசாத்தி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். பாவனி கடந்த 2013ஆம் ஆண்டு தன்னுடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாவனி அண்மையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் பாவனியிடம், நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளபோறீங்களா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பாவனி, என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் இனி நடிப்பில்தான் இருக்கப்போகிறது எனக் கூறியுள்ளார். பாவனியின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.