மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பீச்சில் ஜாலியாக சுற்றி திரியும் பேச்சிலர் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்.!
கோவையைச் சேர்ந்தவர் திவ்யபாரதி. இவர் அக்சஸ் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் ஜோடியாக "பேச்சுலர்" படத்தில் அறிமுகமானார். முன்னதாக இவர் மாடலிங்கில் பிரபலமானவராக இருந்தார்.
மேலும் 2015ம் ஆண்டு "மிஸ் எத்னிக் பேஸ் ஆப் மெட்ராஸ்" பட்டத்தை வென்றுள்ளார் திவ்யபாரதி. மேலும் தொடர்ந்து மாடலிங்கில் பிசியாக இருந்த இவர், "கோயம்புத்தூர் இளவரசி 2016" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு இன்ஸ்டாக்ராமில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, தமிழக இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி லிஸ்டில் உள்ளார். தற்போது இவர் நடித்துள்ள மதில் மேல் காதல் மற்றும் ஆசை திரைப்படங்கள் அடுத்த வருடம் வெளியாகவுள்ளன.
இந்நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வரும் திவ்யபாரதி, தற்போது பீச்சில் உலவுவது போல் செம கூலான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.