மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. மறுபடியுமா?? திடீர் திருப்பங்களுடன், அதிரடியான புதிய கதைக்களம்! வைரலாகும் வீடியோ இதோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் சீரியல்கள் ஏராளம். அவ்வாறு நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி மக்களின் ஃபேவரைட் தொடராக இருப்பது பாரதி கண்ணம்மா. இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இத்தொடரில் வில்லி வெண்பாவின் சதியால் ஹீரோ பாரதியும், ஹீரோயின் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளான லெட்சுமி, ஹேமாவை வைத்து அவர்களை மீண்டும் சேர்க்க பாரதியின் அம்மாவான சவுந்தர்யா போராடுகிறார்.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் புதிய கதைக்களமாக பரபரப்பான ப்ரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஹேமா ஸ்கூலில் லட்சுமியிடம் உனக்கு அப்பா இல்லை, எனக்கு அம்மா இல்லை இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன? என கேட்கிறார். அதற்கு லட்சுமி என்ன கூறபோகிறார்? என்ற ட்விஸ்ட்டோடு அந்த வீடியோ முடிவடைந்துள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.