மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென மயங்கி விழுந்த கண்ணம்மா! அலறியடித்து தூக்கிக்கொண்டு ஓடிய பாரதி!! தீயாய் பரவும் ஷாக் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவ்வாறு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா. நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த தொடரில் வில்லியாக தொகுப்பாளினி பரீனாவும் நடிக்கிறார். கணவர் பாரதி சந்தேகப்படுவதால் அவரை பிரிந்து சென்று தனது குழந்தையுடன் வாழ்க்கையை நடத்த போராடும் பெண்ணாக கண்ணம்மா உள்ளார். இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரின் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், கண்ணம்மா மயங்கி ரோட்டில் விழ, அவரை பார்த்த பாரதி அலறியடித்து தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் பாரதியும், கண்ணம்மாவும் கூடிய விரைவில் இணைவார்கள் என கூறிவருகிறார்கள். மேலும் இந்த காட்சி எப்பொழுது ஒளிபரப்பாகும் எனவும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.