மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னங்கடா இது?.. தீவிரவாதிகளுடன் கேக் வெட்டும் பாரதி கண்ணம்மா டீம்.. இதுதான் காரணமா?.. இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம்..!
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. இத்தொடரில் பாரதி டாக்டராக பணிபுரிய, அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் அட்மினாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அமைச்சர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டதால், தீவிரவாதிகள் மருத்துவமனையில் இருந்த கண்ணம்மா, கண்ணம்மாவின் குழந்தைகள், அகிலன், அவரது மனைவி உட்பட ஊழியர்கள், நோயாளிகள், பொதுமக்களை பிணைக்கதிக்காக பிடித்து வைத்துக்கொண்டனர்.
சிறையில் உள்ள தீவிரவாதியை ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற டிமாண்ட்டை முன் வைத்துள்ளனர். அமைச்சரின் உடல்நிலை மோசமாகவே அவரது உயிரை காப்பாற்ற தீவிரவாதிகள், டாக்டர் பாரதியை மருத்துவமனைக்கு வரவழைத்து உயிரை காப்பாற்ற வேண்டும், இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பாரதி எப்படியோ உயிரை காப்பாற்றுகிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் உள்ள தீவிரவாதி ஒருவர் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களிடம் அத்துமீறி செயல்பட்டு வருகிறார். மேலும், கண்ணம்மாவை அந்த தீவிரவாதி தனியாக அழைத்து தவறாக நடந்துகொள்ள முயன்ற நிலையில், பொங்கி எழுந்த கண்ணம்மா அவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்றார்.
இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள், தீவிரவாதிகளாக நடித்த நடிகர்களுடன் கேக் வெட்டிய வீடியோவை தீவிரவாதிகளில் ஒருவராக நடித்த பிரபல நடிகர் மெட்ராஸ் லிங்கேஷ என்பவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அனுபவம் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். இறுக்கமான சூழலுக்கு இடையில் ஒரு இளைப்பாறுதல். விஜய் டிவி தொலைக்காட்சி பாரதிகண்ணம்மாவில் இருந்து விடைபெறுகிறேன்" என பகிர்ந்துள்ளார்.