மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதனால் மட்டும்தான் நான் உயிருடன் இருக்கேன்... பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பிக்பாஸ் ஐஷூ வெளியிட்ட கடிதம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான விமர்சனங்களை சந்தித்து, குறைந்த வாக்குக்களை பெற்று வெளியேறியவர் ஐஷூ. இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஐஷு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பலரிடமும் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் நான் என் குடும்பத்தினருக்கும், சக பெண்களுக்கும், அவப்பெயரை ஏற்படுத்திவிட்டேன். நிகழ்ச்சியில் என்னை பார்த்தபிறகு என் மீது எனக்கு இருக்கும் மரியாதையே போய்விட்டது எனக் கூறியுள்ளார்.
மேலும் ஒருவரை விரும்புவது, வெறுப்பது எப்படி என எனக்கு தெரியவில்லை. எனது தவறான செயலில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன், விச்சுமா, பிரதீப், அர்ச்சனா, மணி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இந்த நிகழ்ச்சிக்கு தகுதியானவர் கிடையாது என அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கோபம்,காதல், பொறாமை, நட்பு என்னை கண்மூடித்தனமாக்கி விட்டது. எனது பெரிய முதல் மேடை இது. ஆனால் அதனை எப்படி பயன்படுத்தி கொள்வது என எனக்கு புரியவில்லை.
எனது குடும்பத்தை விட்டு விடுங்கள். நான் சமூக வலைதளத்தில் ஏராளமான, அச்சுறுத்தும் வீடியோக்கள் போன்றவற்றை பார்த்தேன். எவ்வளவு வேணாலும் கற்களை என்மீது வீசுங்கள். நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் எனது குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டாம். அவர்கள் என்னால் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார்கள். நான்தான் தவறு செய்தவன். பிக்பாஸ் நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்யும் வரை தள்ளிவிட்டது. ஆனால் எனது பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் மட்டும்தான் நான் உயிருடன் உள்ளேன்.
வனிதா மேம், சுச்சி மேம், சுரேஷ் தாத்தா என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்கள் மீது பெரிய மரியாதை வைத்துள்ளேன். வனிதா அவர்களின் மகளை விட நான் ஒரு வயதுதான் பெரியவள். ஆனால் என்னால் வலிமையாக இருக்க முடியாமல் போய்விட்டது. பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். அவரது நோக்கங்களை தற்போதுதான் நான் புரிந்து கொண்டேன். நிகழ்ச்சியில் ஆபாசமான வார்த்தைகளை பேசியதற்காக மன்னித்து, விடுங்கள். எது சரி எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க தவறி விட்டேன். மன்னித்து விடுங்கள் என பதிவிட்டுள்ளார்.