அனல் பறக்கும் BGM.! விமான நிலையத்தில் செம கெத்து காட்டும் பிக்பாஸ் அசீம்.! வைரலாகும் வீடியோ!!



bigboss-azeem-in-airport-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 6வது சீசன் 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாகவும், அதிரடியாகவும் சென்ற நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் பிரபல சீரியல் நடிகர் அசீம் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அசீம் ஒவ்வொரு நாளையும் சண்டை, சச்சரவு என்றே கழித்தார். மேலும் அவர் போட்டியாளர்களை தகாத முறையில் பேசி சர்ச்சைகளையும் சந்தித்தார். ஆனாலும் அசீமுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரித்தே சென்று இறுதியில் டைட்டிலையும் வென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் பேட்டிகளில் போட்டியாளர்கள் சிலர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு சர்ச்சைகளை சந்தித்தனர். இந்த நிலையில் அசீம் தற்போது மலேசியாவிற்கு சென்றுள்ளார். அவர் விமான நிலையத்தில் ஹிட் BGMஉடன் செம கெத்தாக சென்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.