மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் தர்சனுக்காக, உருக்கமான பதிவுகளுடன், அவரது காதலி வெளியிட்ட அழகிய புகைப்படம்.! உள்ளே !!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர்.
மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர்.
இந்நிலையில் தர்ஷனின் காதலியான சனம் செட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.நீ சென்று 22 நாட்கள் ஆகிவிட்டது. எங்களுடைய அன்பு உனக்கு நிறைய உண்டு என பதிவிட்டுள்ளார்.