மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பிரபல டிவி சீரியலில் அசத்தலாக களமிறங்கிய பிக்பாஸ் ஜூலி! வைரலாகும் விறுவிறுப்பான வீடியோ!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் ஜூலி. அதனை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவருக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர்.
ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டில் அவர் தனது சில நடவடிக்கைகள் மூலம் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார். பின் அவர் என்ன செய்தாலும், அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக இருந்து வந்தார்.
பின் ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் தவமாய் தவமிருந்து என்ற தொடரில் நடித்துள்ளார். அவர் தொடரில் மணப்பெண்ணாக நடிக்க உள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.