மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. இது உடம்பா இல்ல ரப்பரா! பிக்பாஸ் லாஸ்லியா செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 3வது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் ஆர்மியே உருவானது.
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் வர துவங்கியது. லாஸ்லியா ஹர்பஜன் சிங், சதீஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கொழு கொழுவென இருந்த லாஸ்லியா தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிடுவார். இந்நிலையில் லாஸ்லியா தற்போது தனது உடலை வில்லாக வளைத்து உடற்பயிற்சி செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.