மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. இவர்தான் பிக்பாஸ் பிரதீப்பின் கேர்ள் பிரண்டா.! அறிமுகம் செய்து வைத்த பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் அருவி, யாழ், டாடா போன்ற படங்களில் நடித்துள்ளார். சர்ச்சைக்குரிய போட்டியாளராக திகழ்ந்த பிரதீப் இந்த நிகழ்ச்சியின் இறுதிவரை முன்னேறி டைட்டில் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இதற்கிடையில் அவர் டபுள் மீனிங்கில் தவறாக பேசுகிறார், இரவு தூங்க பயமாக இருக்கிறது, அவரால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சில போட்டியாளர்கள் குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவைக்கப்பட்டார். இதில் பிரதீப் தரப்பின் நியாயத்தை கமல் கேட்கவில்லை, இது தவறான முடிவு என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மீண்டும் பிரதீப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் வரவழைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கடந்த வாரம் விளக்கத்தின் மூலம் கமல் வெளிப்படுத்திவிட்டார். இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தனது யூடியூப் சேனலில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து கருத்து கூறி வருகிறார்.
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி நடத்திய பேட்டியில் பிரதீப் ஆண்டனி தனது கேர்ள் பிரண்டுடன் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது சுரேஷ், இவங்களுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம் என பிரதீப்பின் கேர்ள் பிரண்டை அறிமுகம் செய்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.