மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலர் தின கொண்டாட்டம்! கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தாங்கள் காதலர் தினம் கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணி அவரது கணவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாகவும், பின்னர் ஒரு பாடலுக்கு நடனமாடும் கவர்ச்சி நடிகையாகவும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. சினிமாவில் தனக்கென ஒரு தக்க இடத்தை பிடிப்பதற்காக போராடிய அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடினார். மேலும் அதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் நடிகர் சிவாஜியின் பேரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு அத்வைத் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சுஜா வருணி காதலர் தினத்தன்று தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.