பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்-ன் மகளை பார்த்துளீர்களா? வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம் இதோ..



Bigg boss fame Ganesh Venkatraman daughter photos

பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மகள் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் கணேஷ் வெங்கட்ராமனும் ஒருவர். குறிப்பாக இவர் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு, தனி ஒருவன், அபியும் நானும் போன்ற படங்கள் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

சினிமா மட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் பிரபலமான இவர் பல்வேறு விதமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் கணேஷ். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

Ganesh

இப்படி சினிமா, தொலைக்காட்சி என கலக்கிவரும் இவர் பிரபல சீரியல் நடிகை நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதுவரை பெரியளவில் வெளிவராத அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

புத்தாண்டை முன்னிட்டு தங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை கணேஷின் மனைவி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.