மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட நம்ம ஜூலியா இது... பிரபல சீரியலில் செம மாஸாக களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி... எந்த டிவி, எந்த சீரியல் தெரியுமா.?
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதில் கிடைத்த பெருமையால் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஜூலியை ஆரம்பத்தில் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இருப்பினும் மனம் தளராமல் அவர் வேலையில் பிஸியாக இருந்து வந்தார். தொடர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். தற்போது கூட ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் கொற்றவையாக ஜூலி களமிறங்கவுள்ளதாக ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.