மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த தண்ணீருக்கே காய்ச்சல் வந்துவிடும்போல! வைரலாகும் ரைசாவின் நீச்சல்குள புகைப்படங்கள்
பிக்பாஸ் புகழ் நடிகை ரைசா வெளியிட்டுள்ள நீச்சல் உடை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருசில படங்களிலையே பிரபலமாகிவிட்ட இவர் தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.