மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உப்பு போட்டு சாப்புட்றவன் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க மாட்டான்! வச்சு செய்ய காத்திருக்கும் கமல்! வைரலாகும் ப்ரோமோ வீடியோ.
பிக்பாஸ் 6 வது நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.
16 பிரபலங்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு 6 நாட்களை நெருங்கியுள்ளநிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டியின் இரண்டாவது நாளில் இருந்தே மோதல், வாக்குவாதம் என தொடங்கியுள்ள சீசன் நான்கு ஆரம்பத்திலையே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக அனிதா மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையேயான பிரச்சனை விஸ்பரூபம் எடுத்துள்ளது. செய்தியாளர்கள் பேசினால் எச்சில் தெறிக்கும் என சுரேஷ் பேசியதாக அனிதா சம்பத் பிரச்சனை பண்ண, நான் அப்படி கூறவே இல்லை என சுரேஷ் தனது நியாயத்தை கூறிவருகிறார்.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் போட்டியாளர்களுடன் உரையாட கமல் இன்று வருகிறார். கமல் இன்று வருவதால் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இடையிலான பிரச்னையை தீர்த்து வைப்பாரா? குறும்படம் போட்டுக்காண்பிக்கப்படுமா என ரசிகர்கள் ஆவலுடன் காதுள்ளன்னர்.
அதேநேரம், விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில், "உப்பு போட்டு சாப்புட்றவன் உள்ள இருக்க மாட்டான்னு சொல்லிட்டு, உல்லையே இருக்காரு ஒருத்தரு. தேர்ந்தெடுக்கப்படாமலே தலைவரா ஆய்டு எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டு இருக்காரு இன்னோருத்தரு.
நாம எப்படி? எல்லாத்தையும் வேடிக்கை பாத்துகிட்டே இருக்க போறோமா? எதாவது செய்யவேண்டாம்?" என கமல் வீர வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.