மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி நேரத்தில் கசிந்த தகவல்.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இவர்தான்.. அவரா? யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று யார் வெளியேற இருப்பது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
16 பேருடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகாவும், அவருக்கு பின் பாடகர் வேல்முருகனும், அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி என இதுவரை 3 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தீபாவளி என்பதால் எவிக்சன் இல்லை. இந்நிலையில் இந்த வார எவிக்சனில் ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சுசித்ரா, சோம் சேகர் ஆகிய 7 பேரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்தனர். இதில் ஆரி மற்றும் ரியோ இருவரும் காப்பாற்றப்பட்டதாக கமல் நேற்று தெரிவித்திருந்தார்.
அதேபோல் இன்று வெளியான ப்ரோமோவின்படி சோம் சேகர் காப்பாற்றப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று பாடகி சுசித்ராதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்பற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.