மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓ.. ஏழு வருஷத்துக்கு முன்னாடியே பழக்கமா? பிக்பாஸ் 4 இளம் பிரபலத்துடன் ஜூலி! எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!!
தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதன் மூலம் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.
அன்றிலிருந்து இன்றுவரை அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். ஆனாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வபோது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிடுவார்.
இந்த நிலையில் ஜூலி தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏழு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்ட சோம் சேகரும் உள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் ஏழு வருடங்களுக்கு முன்பிலிருந்தே இருவருக்கும் பழக்கம் உள்ளதா என ஷாக்குடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.