மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சுஜாவா இது? என்ன இப்படி மாறிட்டாரு? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.
நெத்தியில பெரிய பொட்டு, கழுத்து நிறையா நகை என மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் சுஜா.
தமிழ் சினிமாவில் ஐட்டம் டான்சராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் மற்றும் நடிகையுமான சுஜா வருநீ. சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற கனவுடன் சினிமாவிற்குள் வந்த இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒருசில படங்களில் துணை நடிகை வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி சினிமாவில் ஜொலித்துவந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய உடனே திருமணம், தற்போது குழந்தை என குடும்ப வாழக்கையில் செட்டிலாகிவிட்டார் சுஜா.
சினிமா, குடும்பம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படம், வீடியோ அல்லது தனது குழந்தையின் புகைப்படம் இப்படி ஏதாவது ஒன்றை சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் வைரலாகிவருகிறார்.
இந்நிலையில் "அவர்கள் என்னை அடக்கம் செய்ய முயன்றார்கள், நான் ஒரு விதை என்று அவர்களுக்குத் தெரியாது!" என்ற பஞ்ச் டயலாக்குடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சுஜா. அதில், பட்டுசேலை உடுத்தி, நெற்றியில் பெரிய பொட்டுவைத்து, கழுத்து நிறைய நகை அணிந்து பார்ப்பதற்கு ராஜமாதா சிவகாமி போல் போஸ் கொடுத்துள்ளார் சுஜா.
இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடும் சுஜா, தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.