#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ரோஷம் இருக்கா? எங்க வீட்டு உப்பையும் சேர்த்து தின்னுங்க" - தர்ஷிகா கிளப்பிய புயல்.. கடுப்பில் அந்த 2 போட்டியாளர்கள்.!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்போட்டி 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நடப்பு சீசனை தொகுத்து வழங்கும் பணிகளை விஜய் சேதுபதி மேற்கொண்டுள்ள காரணத்தால், அதற்கான வரவேற்பும் அதிகமாகியுள்ளது.
விமர்சனம் பண்ணுங்க
இந்நிலையில், இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில், சிவா மற்றும் சௌந்தர்யா ஆகியோரை எந்த பணிகளையும் சரிவர செய்யாதவர்கள் லிஸ்டில் வைக்க, பிக் பாஸ் அவர்களை பாரபட்சமின்றி விமர்சனம் செய்யுங்கள் என கூறுகிறார்.
இதையும் படிங்க: அர்னவ் போல அள்ளிவிட்ட தர்ஷா குப்தா; வன்மத்தை கக்கி காட்டம்.. சாந்தப்படுத்திய விஜய் சேதுபதி.!
கொந்தளிப்பில் ரசிகர்கள்
இதனால் போட்டியாளர்கள் அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க, தர்ஷிகாவோ ஒருபடி மேலே சென்று, " ரோஷம் என்ற ஒன்று உங்க டிக்ஷ்னரியில இருக்கா? இல்லையா?னு தெரியல. எங்களின் வீட்டு உப்பையும் சேர்த்து தருகிறோம் தின்னுங்க" என கூறுகிறார். இந்த விமர்சனம் சிவா, சௌந்தர்யா ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வன்மத்தை கக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்
மேலும் பிக்பாஸ் ரசிகர்கள், விமர்சனம் செய்யுமாறு கூறிய இடத்திலும் வன்மத்தை மட்டும் ஹவுஸ்மேட்ஸ் கக்கி வருகிறார்கள் எனவும், இந்த சீசன் முழுவதும் அனைவரும் எண்டர்டெயின்மெண்ட் என்ற வார்த்தையை மறந்து வன்மம் கக்குபவர்களாக உள்ளனர் எனவும் கமென்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!