மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹேங் ஓவர் போல காமெடி படங்களில் நடிக்க ஆசை; மனம் திறந்த ஹிருத்திக் ரோஷன்.!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் ஹிருத்திக் ரோஷன், அதிகளவு ஆக்சன் படங்களில் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நடித்து பிரபலமானார். இவருக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் உண்டு.
இந்நிலையில், சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு தனது பதில்களை வழங்கி இருந்தார்.
அச்சமயம், அவர் பேசுகையில், "நான் ஹேங் ஓவர் (Hang Over) போன்று நான்கு கதாநாயகர்கள் செய்யும் காமெடி கதையை எதிர்பார்த்த நீண்ட ஆண்டுகளாக காத்திருக்கின்றேன்.
ஆனால், இன்று வரை என்னிடம் எந்த இயக்குனரும் அப்படியான கதைகளை கொண்டு வரவில்லை. எனது அதுபோன்ற காமெடி படங்களில் நடிக்க பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.