மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
400 படங்களில் நடித்த, பிரபல பழம்பெரும் காமெடி நடிகர் மரணம்! திரையுலக பிரபலங்கள் இரங்கல்!
பாலிவுட் சினிமாவில் 70,80 களில் மிகப்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் ஜக்தீப். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது காமெடிக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளன. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் மற்றும் இயக்குனர் நவேத் ஆகியோரின் தந்தை ஆவார்.
மேலும் நடிகர் ஜக்தீப் இறுதியாக 2012 ஆம் ஆண்டு வெளியான கலி கலி சோர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 81 வயது நிறைந்த அவர் வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகரான ஜக்தீப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடல் மும்பையில் உள்ள ஷியா கப்ரிஸ்தானில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.