ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
நொடிப்பொழுதில் பிரபல நடிகையை தாக்கி செல்போன் திருட்டு! அடக்கொடுமையே.. எப்படி நடந்துருக்கு பார்த்தீங்களா!
பாலிவுட் சினிமாவில் லெகர் ஹம் தீவானா தில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிகிதா தத்தா. மேலும் இவர் கபிர் சிங் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து நிகிதா தத்தா கோல்ட், லஸ்ட் ஸ்டோரி, மஸ்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மும்பை பந்த்ரா பகுதியில் இரவு நடைப்பயிற்சி மேற்கொண்டபோது பைக்கில் வந்த இருவர் அவரை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அத்தகைய அதிர்ச்சியான சம்பவம் குறித்து நநிகிதா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரவு 7.45 மணிக்கு நான் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது என் பின்னால் பைக்கில் வந்த இருவரில் ஒருவர் என் தலையில் அடித்தார். அதில் நான் தடுமாறியபோது பயன்படுத்திக் கொண்டு பைக்கின் பின்னால் இருந்தவர் எனது கையில் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
அந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். எதுவும் செய்ய முடியவில்லை. நிலைமையை உணர்ந்து நான் அவர்களைப் பின் தொடர்வதற்குள் தப்பித்து விட்டனர். அப்பொழுது நான் உதவி கேட்ட அவ்வழியாக பைக்கில் வந்தவர் அந்த திருடர்களை பின்தொடர்ந்தும் எந்த பலனும் இல்ல. வெகுதூரம் சென்றுவிட்டனர். அந்த அதிர்ச்சியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.