மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்யாணமாகி குழந்தை பெற்றுக்கொண்டால் போதுமா?.. என் வாழ்க்கையின் வெற்றி ரகசியம் இதுதான் - மனம்திறந்த 48 வயது நடிகை..!!
இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் மலைக்கா அரோரா. இவர் பல படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். தனது வழியில் வரும் அனைத்து தடைகளையும் கடந்து வந்துள்ளார். இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், "30 ஆண்டுகளாக நான் நடிப்பில் நிலைத்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.
புதுப்புது கண்டுபிடிப்புகள், விடாமுயற்சி, காலம் தவறாமை, கடின உழைப்பு இவற்றில் குறிப்பிடத்தக்கது. எனக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் உள்ளனர். அவற்றில் புகைப்படக்காரர்கள், ஊடக மக்கள் அல்லது என்னுடைய குடும்பத்தினர் கூட இருக்கலாம். பெரியளவில் எனக்கு அவர்கள் ஆதரவு தருகின்றனர்.
என்னுடன் தோள் கொடுக்கும் நபர்கள் எப்பொழுதும் இருப்பதால் மட்டுமே என்னால் நடிப்பில் நிலைத்திருக்க முடிகிறது. நமது நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது மிக கடினமானது. இந்தியாவில் உள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் மட்டுமே வாழ்கின்றனர். திருமணம், குழந்தைகள் இவையனைத்தும் ஒரு செயலை தடை செய்யும் வகையில் இருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு குழந்தைகள் பிறந்துவிட்டால் அனைத்தும் நிறைவுபெற்றது என நாம் எண்ணுகிறோம். ஆனால் நான் அதிலிருந்து வேறுபடுகிறேன். அந்த எண்ணங்களை என்னால் மாற்ற முடிந்தது. அதன் காரணமாகவே 30 ஆண்டுகளாக நான் இன்னும் திரையுலகில் நீடித்திருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.