மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தமிழில் படம் இயக்குகிறாரா பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!" யார் ஹீரோ தெரியுமா.?
ஹிந்தித் திரையுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருப்பவர் அனுராக் காஷ்யப். இவர் முதலில் "பான்ச்" என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்தத் திரைப்படம் இன்று வரை வெளியாகவில்லை.
இதையடுத்து பிளாக் பிரைடே, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் போன்ற திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமடைந்தார். தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு, படங்களை இயக்கி வரும் அனுராக் காஷ்யப் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.
தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் வெளியான "இமைக்கா நொடிகள்" படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான லோகேஷ் கனகராஜ் இயக்கிய "லியோ" படத்திலும் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் அனுராக் காஷ்யப்.
தற்போது இவர் இயக்கியுள்ள "கென்னடி" திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழில் திரைப்படம் இயக்கவிருப்பதாகவும், அப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.