மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை 'குத்து' ரம்யா மரணம் அடைந்தாரா.? தன் மீதான வதந்திகள் குறித்து அவரே கொடுத்த விளக்கம்.!
தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் இவர் கர்நாடக தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தீவிரமாக களமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில பிரச்சனைகளால் தற்கொலைக்கு முயன்ற இவரை சந்தித்த ராகுல் காந்தி பல அறிவுரைகளை கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை இவர் மரணம் அடைந்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்திகள் தொடர்பான உண்மை தன்மை தற்போது வெளியாகி இருக்கிறது.
தனது மரணம் குறித்த செய்திகளுக்கு பதில் அளித்திருக்கும் திவ்யா தான் தற்போது ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் இதுபோன்று சமூக ஊடகங்களில் வலம் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒருவரைப் பற்றிய வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.