மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடும் வெளிநாட்டினர்..! வைரல் வீடியோ..!
பிரிட்டனில் உள்ள மக்கள் சிலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து படம் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், ஊரடங்கு காரணமாக படம் வெளியாவது தாமதமாகியுள்ளது. ஊரடங்கு முடிந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. அதேபோல் மாஸ்டர் பட பாடல்களின் டிக்-டாக் வீடியோக்கள் இதுவரை 1.5 பில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரிட்டனில் மக்கள் குடியிருப்பின் அருகில் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து மக்கள் சிலர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடும் வீடியோ ஒன்றை படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#VaathiComing following #SocialDistancing 🤩 pic.twitter.com/KuQDhPd8nz
— Anirudh Ravichander (@anirudhofficial) May 9, 2020