மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.! நடிகர் மன்சூர் அலிகான் மீது பாயும் வழக்கு.! தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், லியோ படத்தில் தனக்கு திரிஷாவை பாலியல் தொந்தரவு செய்வது போன்ற காட்சி கிடைக்கவில்லை என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் நடிகை திரிஷா, மன்சூர் அலிகான் என்னை பற்றி மிகவும் மோசமாக, அருவருப்பான முறையில் பேசிய வீடியோ குறித்து கேள்விப்பட்டேன். இனி அவரை போன்றவருடன் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு அவபெயரை ஏற்படுத்துகின்றனர் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் மன்சூர் அலிகான் மீது சட்டப்பிரிவு 509ன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பிக்கு அறிவுறுத்தியுள்ளது.