மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாங்க வேற மாறி.. நடுரோட்டில் கயல் சீரியல் நடிகை செய்த காரியத்தை பார்த்தீங்களா! வைரலாகும் கலக்கல் வீடியோ!!
தற்போதைய காலகட்டத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு வெள்ளிதிரை நட்சத்திரங்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவ்வாறு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்த தொடர்களில் ஒன்றுதான் யாரடி நீ மோகினி.
அதில் பயங்கர வில்லியாக ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் சைத்ரா ரெட்டி. அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் கயல் தொடரில் முன்னணி நட்சத்திரமாக நடித்து வருகிறார். இத்தொடரில் இவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
மேலும் சைத்ரா தற்போது அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் நடனமாடிய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது நடுரோட்டில் வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாறி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.