மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் இப்படிபட்ட குணம் உடையவரா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு ஆக்சன் கிங் அர்ஜூனுடன் இணைந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆக்சன் கிங் அர்ஜூன் உடன் மீண்டும் இணைந்துள்ளதால் விடாமுயற்சி திரைப்படமும் மங்காத்தா மாதிரி ஹிட் படமாகும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
மேலும் இத்திரைப்படத்தில் திரிஷா, ரெஜினா மற்றும் பிரியா பவானி சங்கர் போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளது. இப்படத்தின் தொடக்க படப்பிடிப்புக் காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட்டு வந்தன.
அஜர்பைஜான் நாட்டில் எடுக்கப்பட வேண்டிய படத்தின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதால் வேறொரு நாட்டில் படத்தின் காட்சிகளை எடுக்க படக்குழு தீர்மானித்ததாக தெரிகிறது. எனவே அந்த இடைவெளியில் அஜித் அவர்கள் சென்னை வந்துள்ளார்.
இவ்வாறு சென்னை வந்துள்ள நடிகர் அஜித், ஏர்போட்டில் தன் ரசிகை ஒருவருடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி அஜித்தை பாராட்டி வருகின்றனர். அதாவது சக்கர நாற்காலியில் வந்த ஒரு பெண் அஜித் மேல் சாய்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித்தும் அவர் தோள் மீது கை வைத்து சிறிய புன்னகையுடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் அன்போடு சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.