மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த செய்தியை கேட்டதும் நான் நொறுங்கி போயிட்டேன்! வேதனையுடன் நடிகை ஷார்மி வெளியிட்ட பதிவு! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சார்மி. இவர் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் வசித்து வரும் சார்மியின் தாய் மற்றும் தந்தை இருவருக்கும் கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மிகவும் வருத்தத்துடன் சார்மி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மார்ச் மாதத்திலிருந்து எனது பெற்றோர்கள் வீட்டில் தனிமையில்தான் இருந்து வருகிறார்கள். மிகவும் கவனமாக தங்களை பார்த்துக் கொண்டு வந்தனர். ஆனால், ஹைதராபாத் வெள்ளமும், அதனால் ஏற்பட்ட மாசும்தான் அவர்களது கொரோனோ தொற்றுக்குக் காரணமாக உள்ளது.
I thank @AIGHospitals and it’s total team for all the care they are taking of parents to fight #coronavirus 🙏🏻
— Charmme Kaur (@Charmmeofficial) October 25, 2020
Doctor NAGESHWAR REDDY u r my hero 🙏🏻 pic.twitter.com/OmloT8r8Sr
எனது அப்பாவிற்கு ஏற்கனவே ஏராளமான ஆரோக்கிய பிரச்சினைகள் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்ததும் உடைந்துவிட்டேன். அவர்கள் இருவரும் உடனடியாக ஹைதராபாத்தில் இருக்கும் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் தாமதப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் தொற்றைக் கண்டறிவதுதான் நிறையப் பாதிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்ற உதவும். எனது பெற்றோர் மீண்டும் நலமாக, மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கக் காத்திருக்கிறேன் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
Amazing medical team of @AIGHospitals pampering my parents 😘😘
— Charmme Kaur (@Charmmeofficial) October 26, 2020
sooo nice to c my parents smiling 😘😘😘#Grateful 🙏🏻
#fighting #covid_19 pic.twitter.com/cjExfrruN5