மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செஃப் வெங்கடேஷ் பட் மகளா இது! அப்பாவுடன் சேர்ந்து செய்துள்ள வேலையை பார்த்தீங்களா! வைரலாகும் அட்டகாச வீடியோ!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் மூன்றாவது சீசன் தற்போது மிகவும் ஜாலியாகவும், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் உள்ளனர்.
அவர்கள் போட்டியாளர்களுக்கு மார்க் போடுவது மட்டுமின்றி கோமாளிகளுடன் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் வேற லெவல். வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக மட்டுமின்றி சவுத் இன்டீஸ், யுபி சவுத், பான் சவுத் ஆகிய பெயர்களில் இந்தியா முழுவதும் ஏராளமான ரெஸ்டாரண்ட்களை நடத்தி வருகிறார். மேலும் யூடியூபிலும் ஆக்டிவாக சமையல் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
வெங்கடேஷ் பட் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக் கூடியவர். எவ்வளவு பிசியாக இருந்தாலும் அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட தவறியதில்லை. இந்த நிலையில் வெங்கடேஷ் பட் துபாய்க்கு சென்ற போது அங்கு தனது மகளுடன் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில், அது வைரலாகி வருகிறது.