மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. செஃப் தாமுவா இது! இளவயதில் ஹீரோ மாதிரி எப்படி இருந்துள்ளார் பார்த்தீங்களா.! ஷாக்கான ரசிகர்கள்.!
தனது அசத்தலான சமையல் திறமையால் மக்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் செஃப் தாமு. இவரது முழுப்பெயர் தாமோதரன். இவர் சமையலில் தனது திறமையால் பல விருதுகளையும், கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். மேலும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார்.
மேலும் செஃப் தாமு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக சமையலில் நிறைகுறைகளை சொல்வது மட்டுமின்றி, போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த கலகலப்பான சேட்டைகளால் அனைவராலும் ரசிக்கப்பட்டார். இவர் யூடியூப் சேனலிலும் எக்கச்சக்கமான சமையல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது சமையல் குறிப்புகளை பின்பற்றுபவர்கள் ஏராளம்.
இவ்வாறு பலரையும் கவர்ந்து பிரபலமாக விளங்கும் செஃப் தாமு சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். இந்த நிலையில் அவர் தற்போது தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டு இதை யார் என்று கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது பெருமளவில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் செஃப் தாமுதானே இது! இளவயதில் செம ஹேண்ட்சம்மாக இருக்காரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.