மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
16 வயது சிறுமி காங்கிரஸ் பிரமுகர் உட்பட 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. தாயிடம் குமுறிய சிறுமி., பதறவைக்கும் துயரம்.!
விடுதியில் வைத்து 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மானேந்திரகர்க் மாவட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஷானவாஸ். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக பிலாஸ்பூரில் உள்ள விடுதியில் 16 வயது சிறுமியை 6 பேர் கும்பலுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமி சம்பவத்தன்று காரில் கடத்தி செல்லப்பட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிறுமி தவித்து வந்துள்ளார்.
மகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை கவனித்த தாய், அவரிடம் பலமுறை கேட்டும் பதில் இல்லை. ஒருகட்டத்தில் தாயிடம் மகள் தனக்கு நேர்ந்ததை கூறி அழுதபோது உண்மை அம்பலமானது. இதன்பின்னரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.