மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவருடைய இந்த கருத்துக்கள் அருவருக்கத்தக்கது.! மன்சூர் அலிகான்பேசியது பற்றி சிரஞ்சீவி கருத்து.!
நடிகர் மன்சூர் அலிகான் லியோ திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும், திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு சில விரும்பத்தகாத கருத்துக்களை பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு குறித்து சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் புகார் வழங்கப்பட்டது.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு, மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தான், அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டும் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதளப் பதிவில், த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த ஒரு சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என்னுடைய கவனத்திற்கு வந்தன. இந்த கருத்துக்கள் கலைஞருக்கு மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாகவுள்ளது.
இந்த கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும் .இது போன்ற கொடூரமான கருத்துக்களுக்கு உண்டான பெண்களுக்கு நான் உடன் நிற்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.