மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எஸ்.பி.பிக்கு நினைவஞ்சலி! அச்சு அசல் அவரை போலவே..அவ்வளவும் சாக்லேட்! வைரலாகும் புகைப்படம்!
பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் இந்தியளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் பலரும் அவ்வப்போது அவருக்கு நினைவஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் கடையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சிலை முழுவதும் சாக்லேட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சூகா என்ற சாக்லெட் பேக்கரியில் முழுவதும் சாக்லெட்டால் செய்யப்படும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் chef ராஜேந்திரன் என்பவர் ஒவ்வொரு ஆண்டும் சாக்லெட்டால் தனது கலைத்திறனை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் 2020 புத்தாண்டையொட்டி மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 339 கிலோ சாக்லெட்டை கொண்டு 5.8 அடி உயரத்தில் 161 மணி நேரம் செலவிட்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் சிலை சாக்லெட்டால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடைக்கு வருபவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இதற்கு முன் அவர் ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், அப்துல்கலாம், இந்திய விமானப்படை பைலட் அபிநந்தன் ஆகியோரின் உருவங்களை சாக்லேட்டுகளை கொண்டு தயாரித்துள்ளாராம்.